பியூட்டி டிப்ஸ்:
பெண்கள் எப்பொழுதுமே தங்கள்
முகத்தையும் தேகத்தையும் அழகாய் வைத்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் என்பது
எல்லோரும் அறிந்ததே.
அவர்களுக்காக நான் சில உபயோகமுள்ள
குறிப்புகளை கொடுக்க ஆசைப்படுகிறேன்.
பிம்பல்ஸ் மிக பெரிய எதிரி
பெண்களுக்கு அதை மறைய வைக்க:
Ø கடலை மாவு,மஞ்சள் மற்றும் கெட்டியானப் பால்
கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று
இருக்கும்.அத்துடன் இதை தொடர்ந்து செய்து வர முகப்பரு நீங்கும்.இது வறண்ட சருமம்
உள்ள தேகத்திற்கு பெருமளவில் பொருந்தும
Ø தக்காளி முகத்தில் தேய்த்து சிறிது நேரம் ஊற
வைத்த பின்பு கழுவினால் முகத்தில் முகப்பரு வருவதை தடுக்கும்.இது ஆயில்
ஸ்கின்னுக்கு பொருந்தும்.
Ø கற்றாழை இலை பிழிந்து சாரக்கி அதை முகத்தில்
தடவி சிறிது நேரம் விட்டு எடுக்கலாம்.ஆனால் சில பேருக்கு இது அலர்ஜியாகும்
வாய்ப்பு உள்ளது.அதனால் உங்கள் கைகளில் சிறிது தடவி பார்த்து அலர்ஜி இல்லையெனில்
தொடர்ந்து பயன்படுத்தலாம்.
Ø ஒரிஜினல் சந்தனத்துடன் ரோஸ் வாட்டர் கலந்து
பயன்படுத்தினால் முகப்பருக்கள் விரைவில் மறைய வாய்ப்புகள் அதிகம்.
பொதுவான டிப்ஸ் முகப்பருக்களை தடுக்க:
v முகப்பருக்களை எப்போதும் கிள்ள கூடாது.
கிள்ளினால் அதிகம் வர வாய்ப்புகள் உண்டு.
v முகப்பருக்கள் வர முக்கிய காரணம் உடலில் உள்ள
வெப்பம் தான். அதனால் நாம் நம் உடலில்
வெப்பத்தை சேமித்து வைக்க இடம் கொடுக்க கூடாது.
v ஒரு நாளைக்கு பெண்கள் 3 1/2 (அ) 4 லிட்டர் அளவிற்கு தண்ணீர் குடிக்க
வேண்டும். பொதுவாக ஆண்களின் உடலை விட பெண்களின் தேகமே அதிக வெப்பம் கொண்டது அதனால்
தான் முகப்பருக்கள் அதிகமாக பெண்களுக்கு வருகின்றன.
v இளநீர் பருக வேண்டும்.தண்ணீரும் அதிகம்
குடிக்க வேண்டும்.
v இளம் வயதினற்கே அதிகளவில் பருக்கள் தோன்றும்.
அதை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய முயற்சி எடுக்க வேண்டும். இல்லையெனில் வடுக்களாக
மாறும்.
வடுக்களை குணப்படுத்த சில வழிகள்:
& வெது வெதுப்பான நீரில் போரிக் பவுடரை
சேர்த்து ஆவி பிடித்தால் முகத்தில் பருக்களின் வடுக்கள் குறையும். தொடர்ந்து
செய்வதால் விரைவில் பலன் கிடைக்கும்.
& போரிக் பவுடர் அழகு சாதன பொருட்கள் விற்பனை
கடைகளில் கிடைக்கும்.
& அறிவியல் ரீதியாக வடுக்களை நீக்க சிறந்த முறையாக கருதபடுவது மைக்ரோநீடில்(MICRONEEDLE) முறையே.
மைக்ரோநீடில் முறையின் பயன்கள்:
¶ பருக்களை குறைக்கிறது
¶ கரும்புள்ளிகளை குறைக்கிறது
¶ அனைத்து வகையான சருமதிற்கும் இம்முறை
சிறந்தது
¶ சரும சுருக்கத்தை குறைக்கிறது.
¶ முடி வளர்ச்சியை தூண்ட பயன்படுகிறது
தங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கிறோம்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
mm.jpg)
.jpg)


.jpg)
.jpg)