affiliate marketing சிநேகிதியே...

Tuesday, 19 June 2012

சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு தயாரிக்கும் முறை.


இந்த பதிவில் சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு எப்படி செய்வது என்பது பற்றி கூறி இருக்கிறோம். நீங்களும் படித்து பயன்பெறுங்கள்.
பக்குவமாக மீன் குழம்பு வைத்தாலே போதும் வாசம் தெருமுனை வரை தூக்கும். அதிலும் இது செட்டிநாட்டு மீன் குழம்பு சொல்லவா வேணும்??

செட்டிநாட்டு மீன் குழம்பு:




தேவையான பொருட்கள்


  • மீன் –1/2 கிலோ
  • வெங்காயம்-200 கிராம்
  • தக்காளி-200 கிராம்
  • பூண்டு(உரித்தது)-ஒரு கைப்பிடி அளவு
  • மஞ்சள் தூள் –1/2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள்-2 டீஸ்பூன்
  • தனியா தூள்-2 டீஸ்பூன்
  • புளி-ஒரு எலுமிச்சை அளவு
  • உப்பு,எண்ணெய்- தேவைக்கேற்ப

தாளிக்க: கடுகு,கருவேப்பிலை,காய்ந்த மிளகாய்
அரைக்க: தேங்காய்துருவல் –1/2 மூடி

செய்முறை:



முதலில் மீனை சுத்தம் செய்து தனியே எடுத்து கொள்ள வேண்டும்.புளியை கரைத்து அதிலே மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,தனியாத்தூள்,உப்பு போட்டு கலக்கவும்.
ஒரு கடாயை எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு,காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். புளிதண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அரைத்த தேங்காய் துருவலையும் அதனுடன் சேர்க்கவும். குழம்பு கொதிக்கும் போது மீனை போடவும்.
மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும்.இப்போது சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு தயார்.
உங்கள் விமர்சனங்களை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம்.

Tuesday, 12 June 2012

தீ விபத்துக்களிலிருந்து தப்புவது எப்படி..?



தீ விபத்தின் போது முதலுதவி செய்வதற்கான சில பொதுவான முறைகளை இங்கே காண்போம்.




  

தீ விபத்து என்பது மிக மோசமான விபத்து ஆகும். அதற்கான முதலுதவிகளை மற்றவர்களுக்கு செய்வதற்கு முன் நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டும் ஏனென்றால் நாம் அந்த விபத்தில் எதிர்பாராமல் சிக்கி கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.எனவே நாம் நம் மீதும் கவனத்துடன் இருத்தல் அவசியம்.

தீ விபத்தில் சிக்கி கொண்டவர்களை காப்பாற்றும் சில பொதுவான வழி முறைகள்:

சிகிச்சை முறை:

*தீயில் பாதிக்கபட்டவரின் காயத்தை  பத்து நிமிடங்களுக்கு ஓடும் நீரில் காண்பிக்கவும்.

 *ஆம்புலன்ஸைத் அழைக்கவும்.

 *பாதிக்கப்பட்டவரைக் கீழே சௌகரியமான நிலையில் படுக்க வைக்கவும்.

 *உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற் பட்டவர்கள்        பாதிக்கப்பட்டிருந்தால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மீது நம்   கவனம் செலுத்த வேண்டும்.

*சம்பந்தப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு 
அவரை  கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

* பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில்காயத்தைக் கழுவவும்.

* கடிகாரம், நகை போன்ற தோலில் ஒட்டக்கூடிய பொருள்களை உடனடியாக அகற்றிவிடுங்கள்.

*நல்ல சுத்தமான முறையில் காயத்தை மூடி வைக்கவும்.

*சிறிய காயங்கலேனில் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை நீரில் கழுவவும்.

பெரிய தீ காயங்களுக்கு:

*தபால் தலை அளவை விட பெரிய அளவில் தீக்காயம் ஏற்பட்டிருந்தால், மருத்துவ உதவிபெற வேண்டியது அவசியம். பெரிய தீக்காயங்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை  அத்தியாவசியம்.

*துணிகளில் தீப்பற்றிக் கொண்டால்  பதற்றப்பட்டு ஓடகூடாது. அப்படி செய்தால் தான் தீ வேகமாகப் பரவும் வாய்ப்பு அதிகம்.

* தீக்காயம் ஏற்பட்டவரை கனமான கோட்டாலோ, போர்வையாலோ சுற்றவும். நைலான் வகைகளைக் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

*பற்றிக்கொண்ட தீ அணையாமல் எரி ந்து கொண்டிருந்தால், கீழே படுக்க வைத்து உருட்டவேண்டும். 


                             

அனைத்து விதமான தீக்காயங்களுக்கும் பொதுவான விதி முறைகள்

●களிம்பு வகைகளை பயன்படுத்தவே கூடாது.

● பிளாஸ்திரி வகைகளை பயன்படுத்தக் கூடாது.

● கொப்புளங்களை உடைக்கக் கூடாது.



உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Saturday, 19 May 2012

பெண்களுக்கான சில பியூட்டி டிப்ஸ்


பியூட்டி டிப்ஸ்:

பெண்கள் எப்பொழுதுமே தங்கள் முகத்தையும் தேகத்தையும் அழகாய் வைத்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.




அவர்களுக்காக நான் சில உபயோகமுள்ள குறிப்புகளை கொடுக்க ஆசைப்படுகிறேன்.
பிம்பல்ஸ் மிக பெரிய எதிரி பெண்களுக்கு அதை மறைய வைக்க:
Ø  கடலை மாவு,மஞ்சள் மற்றும் கெட்டியானப் பால் கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.அத்துடன் இதை தொடர்ந்து செய்து வர முகப்பரு நீங்கும்.இது வறண்ட சருமம் உள்ள தேகத்திற்கு பெருமளவில் பொருந்தும


Ø  தக்காளி முகத்தில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்த பின்பு கழுவினால் முகத்தில் முகப்பரு வருவதை தடுக்கும்.இது ஆயில் ஸ்கின்னுக்கு பொருந்தும்.


Ø  கற்றாழை இலை பிழிந்து சாரக்கி அதை முகத்தில் தடவி சிறிது நேரம் விட்டு எடுக்கலாம்.ஆனால் சில பேருக்கு இது அலர்ஜியாகும் வாய்ப்பு உள்ளது.அதனால் உங்கள் கைகளில் சிறிது தடவி பார்த்து அலர்ஜி இல்லையெனில் தொடர்ந்து பயன்படுத்தலாம்.


Ø  ஒரிஜினல் சந்தனத்துடன் ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தினால் முகப்பருக்கள் விரைவில் மறைய வாய்ப்புகள் அதிகம்.



பொதுவான டிப்ஸ் முகப்பருக்களை தடுக்க:
 
v  முகப்பருக்களை எப்போதும் கிள்ள கூடாது. கிள்ளினால் அதிகம் வர வாய்ப்புகள் உண்டு.

v  முகப்பருக்கள் வர முக்கிய காரணம் உடலில் உள்ள வெப்பம் தான்.  அதனால் நாம் நம் உடலில் வெப்பத்தை சேமித்து வைக்க இடம் கொடுக்க கூடாது.

v  ஒரு நாளைக்கு பெண்கள் 3 1/2 (அ) 4 லிட்டர் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாக ஆண்களின் உடலை விட பெண்களின் தேகமே அதிக வெப்பம் கொண்டது அதனால் தான் முகப்பருக்கள் அதிகமாக பெண்களுக்கு வருகின்றன.


v  இளநீர் பருக வேண்டும்.தண்ணீரும் அதிகம் குடிக்க வேண்டும்.

v  இளம் வயதினற்கே அதிகளவில் பருக்கள் தோன்றும். அதை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய முயற்சி எடுக்க வேண்டும். இல்லையெனில் வடுக்களாக மாறும்.


வடுக்களை குணப்படுத்த சில வழிகள்:
& வெது வெதுப்பான நீரில் போரிக் பவுடரை சேர்த்து ஆவி பிடித்தால் முகத்தில் பருக்களின் வடுக்கள் குறையும். தொடர்ந்து செய்வதால் விரைவில் பலன் கிடைக்கும்.
& போரிக் பவுடர் அழகு சாதன பொருட்கள் விற்பனை கடைகளில் கிடைக்கும்.
& அறிவியல் ரீதியாக வடுக்களை நீக்க சிறந்த முறையாக கருதபடுவது  மைக்ரோநீடில்(MICRONEEDLE) முறையே.

மைக்ரோநீடில் முறையின் பயன்கள்:



  பருக்களை குறைக்கிறது

  கரும்புள்ளிகளை குறைக்கிறது

  அனைத்து வகையான சருமதிற்கும் இம்முறை சிறந்தது

  சரும சுருக்கத்தை குறைக்கிறது.

  முடி வளர்ச்சியை தூண்ட பயன்படுகிறது



தங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கிறோம்

Friday, 18 May 2012

சுவையான மஷ்ரூம் தோசை


மஷ்ரூம் தோசை:



மஷ்ரூம் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
மஷ்ரூம் : 200 கிராம்
தக்காளி : 2
பெரிய வெங்காயம் : 1
பச்சைமிளகாய் : 3
கருவேப்பிலை , கொத்தமல்லி, புதினா
மஞ்சள் தூள் : 1/4 டீஸ்பூண்
மிளகாய் தூள் : 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா : 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் : 1 குழி கரண்டி
கடுகு : 1 டீஸ்பூன்
உப்பு : தேவைகேற்ப

செய்முறை:
ஒரு கடாயில் ஒரு குழி கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு போடவும். கடுகு பொறிந்த உடன் லவங்கம்,பட்டை,ஏலக்காய் போட்டு வதக்கவும். வெங்காயம்,பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். பொன்னிறமாக வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து சிறிதளவு உப்பு போட்டு வதக்கவும்.
   மிளகாய் தூள்,கரம் மசாலா போட்டு பின்பு கருவேப்பிலை, கொத்தமல்லி போடவும்.
   சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்த மஸ்ரூமை போட்டு வதக்கவும்.பிறகு முந்திரியை அரைத்த கொள்ளவும். அரைத்த வைத்த முந்திரியை இந்த கலவையுடன் சேர்த்து தேவைப்படும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
    மஷ்ரூம் வெந்த பிறகு இறக்கி இந்த கலவையை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.

  
பிறகு தோசையில் நெய் ஊற்றி இரண்டு பக்கமும் வெந்த பிறகு மஷ்ரூம் கலவையை ஒரு பக்கம் வைத்து மடித்து கொள்ளவும். இப்போது சுவையான மஷ்ரூம் தோசை ரெடி. 

Friday, 11 May 2012

பாசி பருப்பை கொண்டு இரண்டு சுவையான உணவுகள்


பாசி பருப்பை கொண்டு இரண்டு வித்தியாசமான மற்றும் சுவையான உணவுகளை சமைக்கலாம்

#பாசி பருப்பு கேக்

#பாசி பருப்பு பக்கோடா 

பாசி பருப்பு கேக்




பாசி பருப்பு கேக் செய்ய தேவையான பொருட்கள்:

*பாசி பருப்பு – 200கிராம்

*சர்க்கரை –200கிராம்

*தேங்காய் பால் – 1/2கப்

*மைதா –3 டே.ஸ்பூன்

*வெண்ணிலா எசென்ஸ் – சில துளிகள்

*பாதாம் –2

*முந்திரி –3

செய்முறை:

*பாசி பருப்பை நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.ஒரு பவுலில் பாசி பருப்பு மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு அடுப்பை பற்ற வைத்து கலவை,சர்க்கரை,மைதா,நெய் கலந்து கெட்டியாக வரும் வரை 
கிளறவும்.

        சில துளிகள் வென்னிலா எசென்ஸ் ஊற்றி திரண்டு வரும் வரை கிளறி இறக்கவும். பின்பு நெய் தடவிய பாத்திரத்தில் அந்த கலவையை கொட்டி பரப்பி வைக்கவும்.முந்திரி மற்றும் பாதாமை சிறிய துண்டுகளாக துருவிய பின்பு 
அதை அலங்கரிக்க பயன்படுத்தவும்.

நன்கு ஆறிய பின்பு மட்டுமே துண்டுகள் போட வேண்டும்.இப்பொழுது 
சுவையான பாசி பருப்பு கேக் ரெடி.


பாசி பருப்பு பக்கோடா





பாசி பருப்பு பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்:

 *பாசி பருப்பு –200கிராம்

 *கடலை மாவு –4ஸ்பூன்

 *அரிசி மாவு –4ஸ்பூன்

 *பெரிய வெங்காயம் -2

 *இஞ்சி –சிறிதளவு

 *காய்ந்த மிளகாய் –4

 *பச்சைமிளகாய் -2

 *கருவேப்பிலை கொத்தமல்லி – சிறிதளவு

 *எண்ணெய் –தேவையான அளவு

 *உப்பு –தேவைகேற்ப




செய்முறை:

          பாசி பருப்பை ஒரு மணி நேரம் முன்னதாக ஊற வைத்து கொள்ளவும்.ஊற வைத்த பாசி பருப்பு மற்றும் இஞ்சி, காய்ந்த மிளகாய்,பச்சைமிளகாய் ஆகியவற்றை மிக்சியில் ஒன்றுக்கு பாதியாக அரைத்து கொள்ளவும்.

   அரைத்த கலவையை தனியாக எடுத்து கொள்ளவும்.வெங்காயத்தை நீல வாக்கில் துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.

ஒரு பவுலில் அரைத்த கலவை,வெங்காயம்,உப்பு,கொத்தமல்லி,கருவேப்பிலை,அரிசி மாவு,கடலை  மாவு போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்

  ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக பொரித்து கொள்ளவும்.

  முந்திரி போட்டு பரிமாறவும்.இப்போது சுவையான பாசி பருப்பு பக்கோடா ரெடி.

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன 




Sunday, 6 May 2012

சுவையான வாழைப்பூ பிரியாணி தயாரிக்கும் முறை


வணக்கம் ...


இந்த பதிவில் வாழைப்பூவை பயன்படுத்தி சுவையான பிரியாணி தயாரிக்கும் முறையை 
காண்போம். வாழைப்பூ பிரியாணி சுவையான மற்றும் சத்துள்ள உணவாகும்.






தேவையான பொருட்கள் :
  வாழைப்பூ – 1
  பாஸ்மதி அரிசி – 400 கிராம்
  பெரிய வெங்காயம் – 1
  தக்காளி – 3
  புதினா - சிறிதளவு
  தேங்காய்பால் – 1 கப்
  இஞ்சி பூண்டு விழுது - ஸ்பூன்
  பட்டை – 2
  லவங்கம் – 2
  சோம்பு – 1 ஸ்பூன்  


  ஏலக்காய் - 2
  பிரிஞ்சி இலை – 1
  மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  எண்ணெய் (அ) நெய் – தேவைகேற்ப
  உப்பு – தேவைகேற்ப


செய்முறை :
   ஒரு குக்கரில் எண்ணெய் (அ) நெய் ஊற்றி சோம்பு, லவங்கம், பட்டை, ஏலக்காய் வதக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, புதினா சேர்க்கவும். இந்த கலவை வதங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள வாழைப்பூவை சேர்க்கவும். பின்னர் தேவைகேற்ப மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும். இப்போது பிரியாணிக்கான மசாலா தயார்.

இப்போது குறிப்பிட்டுள்ள அளவு அரிசி மற்றும் 200 மிலி தேங்காய்ப்பால் சேர்க்கவும். குக்கரை மூடி விசில் வரும் வரை வேக வைக்கவும். இப்போது சுவையான வாழைப்பூ பிரியாணி தயார்.
புதினா, கொத்தமல்லி,நெய்யில் வறுத்த முந்திரி கொண்டு ஆகியவை கொண்டு அலங்கரிக்கவும்.இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறலாம். 




தோழிகளுக்கு வணக்கம்....


இந்த வலைப்பூவின் மூலம் எங்களுக்கு தெரிந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் ....
இந்த வலைப்பூ குறித்த உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.....